ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

கரை ஒதுங்கிய ரப்பர் படகு.. மீனவ கிராமத்தில் பதுங்கியிருந்த போலந்து நாட்டவர் கைது - நாகை போலீஸார் தீவிர விசாரணை

கரை ஒதுங்கிய ரப்பர் படகு.. மீனவ கிராமத்தில் பதுங்கியிருந்த போலந்து நாட்டவர் கைது - நாகை போலீஸார் தீவிர விசாரணை

கரை ஒதுங்கிய ரப்பர் படகு

கரை ஒதுங்கிய ரப்பர் படகு

Nagapattinam : நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட போலந்து நாட்டவருடன் மேலும் இரண்டுபேர், ரப்பர் படகுமூலம் வந்ததாக சொல்லப்படும் நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • நாகப்பட்டினம், India

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை முனைக்காட்டில், காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கிய நிலையில், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் பதுங்கியிருந்த  போலந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகேயுள்ள முனைக்காடு பகுதியில் நேற்று  காற்று நிரப்பப்பட்ட இரப்பர் படகு கரை ஒதிங்கி நின்றது. இது குறித்த தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை செய்தனர். கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாகும்.

இதில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், படகு துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவைஇருந்தன. இது குறித்து தகவலறிந்த தஞ்சை சரக டிஐஜி கயல்விழி ,நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், கடற்கரையில் ஒதுங்கியுள்ள  படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், நாகையிலிருந்து மோப்ப நாய் ‘துளிப்’, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு படகை மோப்பம் பிடித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஓடியது. இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் பதுங்கியிருந்த போலந்து நாட்டுக்காரர் ஒருவரை போலீஸார் நேற்றிரவு  கைது செய்துள்ளனர்.

விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவரிடம், இவர் யார்? எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்தும், இவருடன் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என்பது குறித்தும்  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த விசாரணையில், போலந்து நாட்டைச் சேர்ந்த அந்த நபர் இலங்கை சிறையில் இருந்து ஜாமீன்-ல் வெளிவந்ததாக தெரிகிறது. ஆற்காட்டுதுறை பகுதியில் அவர் சென்னைக்கு வழி கேட்டதாக தெரியவந்துள்ளது.

Must Read : பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிவந்து மொட்டையடித்து துன்புறுத்தல்.. ஆட்கடத்தலா? - கோவை தன்னார்வ அமைப்பினரிடம் விசாரணை

இவர், இலங்கையில் இருந்து ரப்பர் படகுமூலம் வந்ததும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவருடன் இரண்டு பேர் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விசா இல்லாமல் தமிழக எல்லைக்குள் வந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செய்தியாளர் - பாலமுத்துமணி

First published:

Tags: Arrested, Nagapattinam, Poland, Sri Lanka