ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

புதுச்சேரி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்... மின்தடையால் கோபமடைந்த கிராம மக்கள் சாலை மறியல்...

புதுச்சேரி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்... மின்தடையால் கோபமடைந்த கிராம மக்கள் சாலை மறியல்...

மின்தடையால் மக்கள் மறியல்

மின்தடையால் மக்கள் மறியல்

Puducherry | புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்க விடப்பட்ட ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள்  ஈடுபட்டதால் இருளில் மூழ்கிய 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு  காரணமாக  சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry, India

  மத்திய அரசு புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை முன்னெடுத்து புதுச்சேரி மின்துறை தனியார்மய முடிவு குறித்து ஏல அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மின்வாரிய ஊழியர்கள் காலவறையற்ற  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அதனால் காரைகால் மாவட்டம் அம்பகரத்தூர், தேனூர், தென்னலக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  அந்த கிராமங்களில் இருளில் மூழ்கியதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரைகால் -திருவாரூர்  நெடுஞ்சாலையில் அம்பகரத்தூர் என்ற இடத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஜெனரேட்டர் வசதியுடன் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  Also see...பொள்ளாச்சி:16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்- காவல்துறைக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு...

  தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மின்துறை ஊழியர்கள் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு மின் பணிகளைச் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் காரைக்கால் மாவட்ட மின்செயற்பொறியாளர் விமல்குமாரின் அறைக்குள் சென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  செய்தியாளர்: பாலமுத்துமணி , நாகபட்டினம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: EB workers, Nagapattinam, Strike