ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் கல்வீச்சு தாக்குதல்.. நாகையில் பரபரப்பு!

அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் கல்வீச்சு தாக்குதல்.. நாகையில் பரபரப்பு!

பாமக போராட்டம்

பாமக போராட்டம்

கூட்டம் முடிந்து விட்டு அன்புமணி ராமதாஸ் வெளியே வந்த போது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam | Nagapattinam

நாகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் மர்ம நபர்கல் கல் வீசி தாக்க முயன்றதால் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்சியின் முன்னோடிகளை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளிடையே கலந்துரையாடி வருகிறார்.

அதன்படி நாகையில் தனியார் திருமண அரங்கில் நடந்த பாமக கூட்டத்திற்கு பிறகு அன்புமணி ராமதாஸ், தொண்டர்களோடு அமர்ந்து மதிய உணவு அருந்தியுள்ளார். அப்போது மண்டபத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர்களை கட்சித் தொண்டர்கள் வெளியே அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் கூட்டத்தை முடித்துவிட்டு அன்புமணி ராமதாஸ் புறப்பட்ட போது, பாமக நாகை மாவட்ட செயலாளர் சித்ரவேல் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த பாமகவினர் மீது மர்மநபர்கள் சிலர் கல் வீசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க | சாதிக்க எதுவும் தடையில்லை.. தன்னம்பிக்கையுடன் ஓவியம் வரைந்து அசத்தும் மாற்றுத்திறனாளி சிறுவன்

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த 3 குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாகை நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாமகவினர் காரை நடு ரோட்டில் நிறுத்தியதால் பரபரப்பு  ஏற்பட்டது.

இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவரை, தாக்குதல் நடத்தியதாக கூறி பாமகவினர் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பாலமுத்துமணி, நாகை.

First published:

Tags: Local News, Nagai, PMK, Pmk anbumani ramadoss