பொதுவாக ஒரு நபர் இறக்கும் போது அவர் மீது நிறைய மாலைகள், மலர் வளையங்கள் வைக்கப்படுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலை தான் போட வேண்டும் என ஊரே சேர்ந்து அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் சிறிய அளவில் உள்ள மாலைகள் தொடங்கி, பெரிய அளவில் ஆளுயர மாலைகள் கூட இறந்த நபர்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது. வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2 ஆம் சேத்தி ஊராட்சியில் சாந்தான்வெளி, அகரம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வது மற்றும் மாலை போடுதல் தொடர்பாக, சமீபத்தில் கூட்டம் நடத்தினர்.
அந்த கூட்டத்தில் பொதுவாக இல்லங்களில் மரணம் ஏற்படும் போது கிராமத்தினர் சார்பில் ஒரு மாலை மட்டும் அணிவித்து இறுதி சடங்குகள் செய்வது என்றும், இறப்பு செய்தி அறிவிக்கும் போதே மாலை தவிர்க்கவும் என அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.
Also see... மிரட்டும் மாண்டஸ் புயல்.. பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
மேலும் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் தான் தற்போது அதிகம் கவனம் பெற்றும் வருகிறது. பொதுவாக, இறந்த ஒரு நபருக்கு நிறைய மாலைகள் போடும் போது அவரது உடலின் மீது மாலைகள் அப்படியே குவிந்து கிடக்கும். அது மட்டுமில்லாமல், இறந்தவரின் மீது போடபடும் நூற்றுக்கானக்கான மாலைகளை ஆள் வைத்து வெட்டி டாடா ஏசி வேனில் ஏற்றி மாலையில் உள்ள பூக்களைவழி நெடுக தூவி செல்லுகின்றனர்.
அவ்வாறு போடும் மாலைகள் மீது இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விபத்துக்குள்ளாகி ஒரு சிலர் இறந்து உள்ளனர். பல பேர் காயம்பட்டு குடும்ப பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில் அதனை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், மாலை வாங்க வசதி அற்றவர்கள் கூட துயர நிகழ்வுக்கு வர இயலாத நிலைமையை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வசதிக்கு ஏற்றவாறு சிறியது முதல் பெரிய மாலைகள் போடும் போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்க்கவும் உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவுகளை அந்த கிராம மக்கள் எடுத்துள்ளனர்.
Also see... காங்கிரஸ் வசமாகுமா இமாச்சல்? முன்னேறும் காங்கிரஸ்.. பின்தங்கும் பாஜக!
மேலும் ஊரின் சார்பில் இறந்தவருக்கு ஒரு மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும். சம்மந்திபுரம் வருபவர்கள் ஒரு மாலை மட்டுமே எடுத்து வரவேண்டும். டிரம்செட் வைக்க கூடாது என பல்வேறு கட்டுபாடுகளையும் விதித்துள்ளனர். மேலும் மாலைக்கு பதில் குடும்பத்திற்கு ரூபாய் 200 வழங்கிடவும் அந்த தொகையில் இறுதி சடங்கை நடத்துவது என்றும் முடிவு செய்து உள்ளனர்.
இதனால் இறுதி சடங்கிற்கு லட்சகணக்கில் செலவு செய்வது தவிர்க்கப்படும் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை ஏற்படும் வாழும்போது ஏழை, நடுத்தர வாதி, பணக்காரன் என்ற வித்தியாசமான வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் இறப்பில் வித்தியாசத்தை ஒழித்து அனைவரும் சமம் என எடுத்துக்காட்டும் இந்த முயற்சியை கையில் எடுத்த இந்த கிராம மக்களை பாராட்டுதல் தகும். இதேபோல் அனைத்து இடங்களிலும் இம்முறையை பின்பற்றினால் இறப்பில் மட்டுமாவது சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்யலாம்.
செய்தியாளர்: பாலமுத்துமணி, வேதாரண்யம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Local News, Vedaranyam