Home /News /nagapattinam /

நியூஸ்18 செய்தி எதிரொலியால் கிராம மக்களுக்கு கிடைத்த பஸ் வசதி...

நியூஸ்18 செய்தி எதிரொலியால் கிராம மக்களுக்கு கிடைத்த பஸ் வசதி...

கிராம மக்களுக்கு கிடைத்த பஸ் வசதி

கிராம மக்களுக்கு கிடைத்த பஸ் வசதி

News18 impact : பிரச்சனையை தீர்த்து வைத்த நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India
    பேருந்து வசதி இல்லாமல் 5 கிலோ மீட்டர் தூரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நடந்து சென்ற நிலையில், நியூஸ்18 செய்தி எதிரொலியாக   அவர்களுக்கு பேருந்து வசதி கிடைத்துள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த மேலவாழக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட  ஏர்வைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளைக்கு  அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்  தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளி சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. வெளியூர் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் குறித்து நியூஸ்18 தமிழ்நாடு  ஊடகத்தில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த செய்தி எடுத்துச் செல்லப்பட்டது. இதன் எதிரொலியாக,  அரசு பேருந்து போக்குவரத்தை ஏர்வகாட்டில் இருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று காலை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுடன் அவரும் பேருந்தில் பயணித்தார்.

    கிராம மக்களுக்கு கிடைத்த பேருந்து சேவை


    தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வதற்கு வசதியாக 8.30 மணி அளவில் இந்த பேருந்து நாகப்பட்டினம் வரை இயக்கப்பட உள்ளது. மாலை 5.30 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் வகையில் மறு மார்க்கத்தில் பேருந்து இயக்கப்பட உள்ளது.

    பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஆட்சியர்


    தங்களது நீண்ட கால பிரச்சனையை தீர்த்து வைத்த நியூஸ்18 தமிழ்நாடு  ஊடகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Nagapattinam, News18 Impact

    அடுத்த செய்தி