நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சென்னை பெட்ரோலிய கழக நிறுவனத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில், கடந்த இரண்டாம் தேதி கசிவு ஏற்பட்டது. இதனால், கடல்நீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் அப்பகுதியில் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக மீனவ கிராம மக்கள் குற்றம் சாட்டினர். அடுத்தடுத்து இரண்டு முறை கசிவு ஏற்பட்ட போதும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சரி செய்யப்பட்டதாக சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்தது.
இதையும் படிங்க; H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு... முகக்கவசம் அணிந்து வீட்டில் தனிமையில் இருங்க.. அமைச்சர் அட்வைஸ்..!
ஆனால், எண்ணெய் குழாயை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இன்று குழாயில் பம்பிங் செய்ததால் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து கடலில் கலந்தது. மூன்றாவது முறையாக கசிவு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பட்டினச்சேரி கடற்கரையில் திரண்டனர். இதையடுத்து, வட்டாட்சியர் ராஜசேகர் நேரில் சென்று கச்சா எண்ணெய் குழாய் கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி சிபிசிஎல் நிறுவனம் செயல்படுவதாக கிராம மக்கள் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குழாயை சுத்தம் செய்வதற்காக தண்ணீர் மட்டுமே செலுத்தப்பட்டதாக சிபிசிஎல் விளக்கம் அளித்துள்ளது. எனவே, தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், குழாயில் எஞ்சி இருந்த சிறிதளவு ஆயில் கசிந்ததாகவும் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crude oil, Local News, Nagapattinam