ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

“SC எல்லாம் அங்கன்வாடியில் சமைக்க கூடாது” - அதிமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பேச்சால் சர்ச்சை!

“SC எல்லாம் அங்கன்வாடியில் சமைக்க கூடாது” - அதிமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பேச்சால் சர்ச்சை!

ஒப்பந்தகாரர் ரமேஷ்

ஒப்பந்தகாரர் ரமேஷ்

தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரை பணியில் வைக்க கூடாது எனவும் எஸ்சி சமூகத்தை வளர்த்துவிடக் கூடாது என்று சாதிய வன்மத்தோடு அதிமுக பிரமுகர் ரமேஷ் பேசுயுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagapattinam, India

  நாகை அருகே அங்கன்வாடி சமையலர் பணியிடத்திற்கு தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை நியமனம் செய்யக்கூடாது என அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும், ஒப்பந்தக்காரருமான ரமேஷ் என்பவர் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து பணியாளர் மற்றும் ஊட்டச்சத்து உதவி பணியாளர் ஆகிய பணியிடங்கள் சில மாதங்களாக காலியாக உள்ளது.

  இந்நிலையில் திட்டச்சேரி பகுதியில் பணிபுரியும் ஊட்டச்சத்து பணியாளர் செல்வி என்பவர் கோபுராஜபுரம் அங்கன்வாடி மையத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்துள்ளார். இதனால் அங்கு பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பால் தற்காலிகமாக கோபுராஜபுரம் அங்கன்வாடி மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த மகேஷ்வரி என்பவரை நியமனம் செய்துள்ளார்.

  இதனை அறிந்த கோபுராஜபுரம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஷ்வரியின் கணவரும்,  ஒப்பந்தக்காரருமான ரமேஷ் என்பவர் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாலை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.

  தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரை பணியில் வைக்க கூடாது எனவும் எஸ்சி சமூகத்தை வளர்த்துவிட கூடாது என்று சாதிய வன்மத்தோடு அதிமுக பிரமுகர் ரமேஷ் பேசுயுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதையும் வாசிக்க: தலித் பெண்ணிற்கு மயக்கமருந்து கொடுத்து பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை : பூசாரி உள்ளிட்டோர் தலைமறைவு

  இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு அமைப்பு மற்றும் கோபுராஜபுரம் கிராம மக்கள் சார்பில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  - பாலமுத்துமணி, செய்தியாளர், நாகப்பட்டினம்

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Anganvadi, Dalit cook, Nagapattinam