முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / காதலனுடன் ஒட்டம்பிடித்த தங்கை.. வீடு புகுந்து தாக்கிய சகோதர்.. இளைஞர் உயிரிழந்த பரிதாபம்..!

காதலனுடன் ஒட்டம்பிடித்த தங்கை.. வீடு புகுந்து தாக்கிய சகோதர்.. இளைஞர் உயிரிழந்த பரிதாபம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில்  கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி அய்யப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம்  மேலத்தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், இவரும் புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகள் சுகுணாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி சுகுனா காதலனோடு வாழ்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறி  காமேஸ்வரத்தில் உள்ள தினேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையும் படிங்க; “வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை..” மகனை நினைத்து உருகிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இதனால் ஆத்திரமடைந்த சுகுணாவின் சகோதரர் மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்கள் சென்னையைச் சேர்ந்த அப்துல் சலாம், வீரசேகரன், முரளி,  கேசவன் ஆகியோர் தினேஷ் வீட்டில் புகுந்து காதலன் தினேஷ், அவரது பெற்றோர்கள், சகோதரர் அய்யப்பன் ஆகியோரை தாக்கிவிட்டு சுகுனாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில்  கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி அய்யப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு 108 வாகனத்தில்  நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுக் குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே காதல் விவகாரத்தில் காதலனின் அண்ணனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Lovers, Nagapattinam