ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

அரசு மருத்துவர் மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அடாவடி - வீடியோ வெளியாகி பரபரப்பு

அரசு மருத்துவர் மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அடாவடி - வீடியோ வெளியாகி பரபரப்பு

திமுக நிர்வாகி அடாவடி

திமுக நிர்வாகி அடாவடி

ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி பாபு தன்னுடைய அடியாட்களுடன் சித்த மருத்துவ கிளினிக்கிற்கு சென்று அங்கிருந்த கண்ணாடியை உடைத்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Nagapattinam, India

  நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவரையும், அவரது தாயையும் க்ளினிக்குக்குள் புகுந்து திமுக நிர்வாகி ஒருவர் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் சித்த மருத்துவர் ஆறுமுகம் என்பவர் ஒரு கிளினிக் வைத்துள்ளார். அதன் அருகிலேயே அமிர்தாலயா என்ற பெயரில் மெடிக்கல் ஷாப்பும் வைத்துள்ளார்.

  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக ஆறுமுகம் பணியாற்றி வருகிறார். அவர் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனது கிளினிக்கில் நோயாளிகளை பார்ப்பது வழக்கம். ஒரு நிலம் தொடர்பாக சித்த மருத்துவர் ஆறுமுகத்திற்கும், பழக்கடை நடத்தி வரும் சண்முகம் மற்றும் அவரது மகன் மணிமாறன் ஆகியோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

  இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக ஆறுமுகம் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் அழைத்தனர். சண்முகம் தரப்பினர் தனக்கு ஆதரவாக பேசுவதற்காக திமுக வார்டு செயலாளர் பாபுவை அழைத்து வந்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து பாபு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மருத்துவர் ஆறுமுகம் உடன்படவில்லை எனக்கூறப்படுகிறது.

  இதையும் வாசிக்க: காதலியை பெண் கேட்டதால் பெண்ணின் தந்தை தாக்குதல்... சோகத்தில் இளைஞர் தற்கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

  இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி பாபு தன்னுடைய அடியாட்களுடன் சித்த மருத்துவ கிளினிக்கிற்கு சென்று அங்கிருந்த கண்ணாடியை உடைத்தார். அதை தடுக்க வந்த மருத்துவர் ஆறுமுகம், அவரது தாய் சாந்தி ஆகியோரையும் தாக்கினார்.

  பாபுவுடன் வந்த அடியாட்கள் மருத்துவர் ஆறுமுகத்தை மேலும் தாக்கினர். காயம் அடைந்த சாந்தி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த நிலையில் திமுக நிர்வாகி அடியாட்களுடன் சென்று கிளினிக்கை அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் குறித்து திமுக வார்டு செயலாளர் பாபு மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, DMK cadres, Government doctors