ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

’தலித் எல்லாம் அங்கன்வாடியில் சமைக்க கூடாது’ - சாதி ஆணவத்தோடு பேசிய அதிமுக பிரமுகர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

’தலித் எல்லாம் அங்கன்வாடியில் சமைக்க கூடாது’ - சாதி ஆணவத்தோடு பேசிய அதிமுக பிரமுகர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

ஒப்பந்தகாரர் ரமேஷ்

ஒப்பந்தகாரர் ரமேஷ்

தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரை பணியில் வைக்க கூடாது எனவும் எஸ்சி சமூகத்தை வளர்த்துவிட கூடாது என்று சாதிய வன்மத்தோடு அதிமுக பிரமுகர் ரமேஷ் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India

    தலித் பெண் அங்கான்வாடி பணியாளராக இருக்க கூடாது என பேசிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரமேஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து பணியாளர் மற்றும் ஊட்டச்சத்து உதவி பணியாளர் ஆகிய பணியிடங்கள் சில மாதங்களாக காலியாக உள்ளது.

    இந்நிலையில் திட்டச்சேரி பகுதியில் பணிபுரியும் ஊட்டச்சத்து பணியாளர் செல்வி என்பவர் கோபுராஜபுரம் அங்கன்வாடி மையத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்துள்ளார். இதனால் அங்கு பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பால் தற்காலிகமாக கோபுராஜபுரம் அங்கன்வாடி மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த மகேஷ்வரி என்பவரை நியமனம் செய்துள்ளார்.

    இதனை அறிந்த கோபுராஜபுரம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஷ்வரியின் கணவரும், ஒப்பந்தக்காரருமான ரமேஷ் என்பவர் அங்கன்வாடி பணியாளர் நீலாம்பாலை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.

    இதையும் வாசிக்க: ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை... 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது...

    தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரை பணியில் வைக்க கூடாது எனவும் எஸ்சி சமூகத்தை வளர்த்துவிட கூடாது என்று சாதிய வன்மத்தோடு அதிமுக பிரமுகர் ரமேஷ் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக விசிக, சிபிஎம் மற்றும் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரமேஷ், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: ADMK, Dalit cook, Nagapattinam, SC / ST Act