ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

சாதிக்க எதுவும் தடையில்லை.. தன்னம்பிக்கையுடன் ஓவியம் வரைந்து அசத்தும் மாற்றுத்திறனாளி சிறுவன்

சாதிக்க எதுவும் தடையில்லை.. தன்னம்பிக்கையுடன் ஓவியம் வரைந்து அசத்தும் மாற்றுத்திறனாளி சிறுவன்

நாகை மாற்றுத்திறனாளி மாணவர்

நாகை மாற்றுத்திறனாளி மாணவர்

நாகை அருகே இரு கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிலையிலும் தனது தனித் திறமையால் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ஓவியம் வரைந்து அசத்துகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Nagapattinam | Nagapattinam

  நாகை அருகே இரு கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிலையிலும் தனது தனித் திறமையால் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ஓவியம் வரைந்து அசத்துகிறார்.

  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள ராதாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்காலத்தூர் பகுதியில் வசித்து வரும் தனசேகரன்- மாரியம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளன.

  இவர்களுடைய இரண்டாவது மகனான தமிழரசன் பிறப்பிலேயே இரு கைகள் மற்றும் கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தேவூர் அரசு நிலைப்பள்ளியில் 9ம்  வகுப்பு படித்து வருகிறார். தினமும் இவரை பள்ளிக்கு இவருடைய அண்ணன் தமிழ்ச்செல்வன் சைக்கிளில் அழைத்து சென்று விடுகிறார்.

  ஏழ்மையான சூழலிலும் தனது 3 பிள்ளைகளை பாசத்துடன்  அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பெற்றோர்கள் வளர்த்து வந்த நிலையில்  கடந்த 14 வருடத்திற்கு முன்பு முடக்கு வாதத்தால்   தந்தை தனசேகரன் பாதிக்கப்பட்டார்.

  தொடர்ந்து  அறுவை சிகிச்சை செய்ததன் பின் பக்க விளைவால் நடக்க முடியாத நிலைக்கு சென்று வீட்டிலேயே படுத்த படுக்கையாக உள்ளார். மேலும் தற்பொழுது தீவிரமடைந்த பாதிப்பு காரணமாக வாய் பேச முடியாத நிலையில் தனது அன்றாட வேலையை கூட செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் கணவரையும், தனது பிள்ளைகளையும் ஹோட்டலில் வேலை பார்த்து மாரியம்மாள் அரவணைத்து வருகிறார். அன்றாடம் ஈட்டும் வருவாய் ரூபாய் 250 தினசரி உணவுக்கே போதுமானதாக இல்லை. இந்நிலையில் இவர்களுடைய மூத்த மகன் பள்ளி முடிந்து மாலையில் குடும்ப  வறுமையை போக்க  பார்டைம் எதாவது வேலைக்கு செல்கிறார்.

  தாய் மற்றும் மூத்த மகனின் அன்றாட வருவாயிலேயே இந்த குடும்பம் இயங்கி  வருகிறது. வறுமையான சூழலிலும் சாதிக்க வறுமை ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவருக்கு அரசு சார்பில் மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் 1500 வழங்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியரின்  முயற்சியால் கூடுதலாக 500 ரூபாய் சேர்த்து 2000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

  இதையும் படிங்க | திமுக - பாஜகவினர் இடையே வெடித்த மோதல் : நகர்மன்ற உறுப்பினர் உள்பட 7 பேருக்கு காயம்!

  மேலும் சிறுவனின் தனித்திறமமையை கண்ட  மாவட்ட ஆட்சியர்  அ.அருண்தம்புராஜ்,கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில்  ஒவ்வொரு முறையும் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது மாணவனின் வீட்டிற்கு நேரில் வந்து நலம் விசாரித்தும், ஓவியம் வரைவதற்கு தேவையான பென்சில், ஸ்கெட்ச் உள்ளிட்ட உபகரணப் பொருட்களையும்  ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியும் சிறுவனை ஊக்கப்படுத்தி வருகிறார்‌.

  மேலும் அரசு சார்பில் இவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வீட்டினை  விரைந்து கட்டி தரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் மாற்றுதிறனாளி மகனை கூலி வேலை செய்து பராமரித்து வரும் பெண்ணுக்கு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

  அன்றாடம் வருவாய் வரும் வகையில் சுயத்தொழில் துவங்க ஏதுவாக அரசு வங்கியில் கடன் பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கூட தனது தனி திறமையால் சாதனையாளராக இந்த மாணவன் மென்மேலும் வளர்ந்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதே குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த கிராம மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

  செய்தியாளர்: பாலமுத்துமணி, நாகை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Nagapattinam, School student