ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

நாகையில் பாரம்பரிய உடையில் கும்மியடித்து பொங்கலை கொண்டாடிய மாணவிகள்!

நாகையில் பாரம்பரிய உடையில் கும்மியடித்து பொங்கலை கொண்டாடிய மாணவிகள்!

மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்

மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்

Nagai Womens college pongal celebration | கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான புடைவை அணிந்து வந்து கரும்பு தோரணங்கள் கட்டி, வண்ண கோலமிட்டு,மண் பானையில் பொங்கல் வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகையில் பாரம்பரிய உடையில் கும்மியடித்து, படையலிட்டு   கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா களைக்கட்டி உள்ளது. அந்த வகையில் நாகப்பட்டினம் ஏடிஎம் மகளிர் தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான புடைவை அணிந்து வந்து கரும்பு தோரணங்கள் கட்டி, வண்ண கோலமிட்டு, மண் பானையில் பொங்கல் வைத்தனர்.

இதனை தொடர்ந்து பாரம்பரிய நடனத்துடன் கும்மியடித்து, குலைவையிட்டு பொங்கல் விழாவை கொண்டாடிய மாணவிகள் வாழை இலைப்போட்டு  பொங்கல், கரும்பு, பழங்களை படைத்து சூரிய பகவானை வழிபாடு செய்தனர். மத வேறுபாடின்றி அனைவரும் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடியது மன நிறைவாகவும், மகிழ்ச்சியாவும் இருந்ததாகவும் மாணவிகள் உற்சமாக கூறினர்.

First published:

Tags: Local News, Nagapattinam, Pongal 2023