Home /News /nagapattinam /

25 ஆயிரம்‌ கோடி கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயம் - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

25 ஆயிரம்‌ கோடி கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயம் - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

அமைச்சர் பெரியகருப்பன்

அமைச்சர் பெரியகருப்பன்

Nagapattinam : இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25ஆயிரம்‌ கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நாகையில் தெரிவித்தார்.

    தமிழகத்தில் இந்தாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25ஆயிரம்‌ கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை தமிழக  ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்  ஆய்வு மேற்கொண்டார். கீழையூர் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

    பின்னர்  நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பா கோவிலில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் கட்டிட பணிகளை தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடித்திட பயணாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்‌. அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6.83கோடி மதிப்பீட்டில் 203 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன் உதவியினை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் இந்தாண்டு தமிழகம் முழுவதும் 25ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு  மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அமைச்சர் பெரியகருப்பன்


    கடந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 21ஆயிரத்து 760கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கி தமிழக அரசு சாதனை படைத்ததாக தெரிவித்தார்.

    Must Read :  தமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - கி.வீரமணி

    பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப  செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    செய்தியாளர் - பாலமுத்துமணி, நாகை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Loan, Nagapattinam

    அடுத்த செய்தி