ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19% ஆக அதிகரித்த மத்திய அரசு...

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19% ஆக அதிகரித்த மத்திய அரசு...

மாதிரி படம்

மாதிரி படம்

Agriculture News | விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

  விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தொடர் மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவு 17 சதவீதத்துக்கு மேல் இருந்ததால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

  இதற்கிடையில், விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் அரசிடம் அறிக்கை அளித்திருந்தனர்.

  இதையும் படிங்க : குரூப் 2 ரிசல்ட் தாமதம் ஏன்? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

  இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காவிரி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், மத்திய அரசின் தளர்வு போதாது என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Agriculture, Cauvery Delta, Tamilnadu