ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

மனித முகம் தோற்றத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி... ஆச்சரியமாக பார்த்து செல்லும் மக்கள்..!

மனித முகம் தோற்றத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி... ஆச்சரியமாக பார்த்து செல்லும் மக்கள்..!

மனித முகம் கொண்ட ஆட்டுக்குட்டி

மனித முகம் கொண்ட ஆட்டுக்குட்டி

மனித முக தோற்றத்தில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagapattinam, India

  நாகை அருகே பிரதமராமபுரத்தில் உள்ள விவசாயின் வீட்டில் இறந்த நிலையில் மனித முகம் தோற்றத்தில் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  இரு தலை ஆட்டுக்குட்டி, 8 காலுடன் கன்றுக்குட்டி என்று விலங்குகளிலும் வித்தியாசமான பிரசவங்கள் நடந்துள்ளது. . பெரும்பாலும் இவ்வாறான குறைபாட்டுடன் பிறக்கும் விலங்குகள் உயிர் பிழைப்பதில்லை. பல பிறக்கும்போதே இறந்துதான் வெளியே வருகின்றன. இப்படி ஒரு நாகையில் நடந்துள்ளது.

  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாமராமபுரம் ஈசிஆர் மெயின் ரோடு உப்பு குளத்தான் கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாய கூலித் தொழிலாளியான இவர் 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆடானது  குட்டிப்போட்டுள்ள நிலையில்,  ஆட்டுக்குட்டி மனித முகத்தோடு இறந்து பிறந்துள்ளது.

  Also see... ஹாஸ்டலில் சாப்பிட்ட பிரியாணி... வாந்தி மயக்கத்தால் 150 கல்லூரி மாணவர்களுக்கு சிகிச்சை!

  ஆட்டுக்குட்டி மனித முகம்போன்று இருந்ததை அப்பகுதியினர் வீடியோ எடுத்து உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  செய்தியாளர்: பாலமுத்துமணி, நாகப்பட்டினம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Nagai