முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / திருடச் சென்ற வீட்டில் ஊறுகாய் சைடிஷ், சொம்பில் தண்ணீர்.. மதுபோதையில் சாவகாசமாக கொள்ளை

திருடச் சென்ற வீட்டில் ஊறுகாய் சைடிஷ், சொம்பில் தண்ணீர்.. மதுபோதையில் சாவகாசமாக கொள்ளை

மாதிரி படம்

மாதிரி படம்

சாவகாசமாக மது அருந்திவிட்டு திருடிச் சென்றுள்ள ருசிகர சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சி ஊராட்சி ஆய்மழை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மனைவி சந்திரகலா. இவர்கள் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருத்துறைப்பூண்டியில் ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். திருவிழா முடிந்தவுடன் அங்குள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இதனிடையே  சந்திரகலா வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சந்திரகலா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. கைரேகை பதியாத அளவிற்கு தண்ணீரால் துடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அதோடு மட்டுமின்றி ப்ரிட்ஜில் இருந்த ஊறுகாய் மற்றும் சொம்பில் தண்ணீர் எடுத்துச் சென்று அருகில் இருந்த வயல்வெளியில் சாவகாசமாக மது அருந்திவிட்டு திருடிச் சென்றுள்ள ருசிகர சம்பவம் அரங்கேறி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைரத் தோடு, ரூ.1,500 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Gold Theft, Nagapattinam