நாகை மாவட்டம் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில் சென்னை பெட்ரோலிய கழகத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. மேலும், கடலில் உள்ள மீன்களும் செத்து மிதந்தன. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், குழாய் உடைப்பை சரி செய்ய முயன்றனர். அப்போது அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மீனவர்கள், குழாயை முழுமையாக அகற்ற வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பட்டினச்சேரியில் மீனவ பஞ்சாயத்துதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சிபிசிஎல், ஒஎன்ஜிசி, மீன்வளம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளும் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனர். பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவற்றின் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, கச்சா எண்ணெய்-யை படிய வைத்து பிரித்தெடுக்கும் முறை நடைபெற்றது. கடல் சீற்றம் காரணமாக, அவ்வப்போது தொய்வு ஏற்பட்ட நிலையில், நள்ளிரவில் இப்பணி மீண்டும் தொடங்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crude oil, Local News, Nagapattinam