ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

என்ன விட்டு போகாத.. கன்று குட்டியை தூக்கி சென்ற ஆட்டோவை துரத்தி சென்ற தாய் பசு! நெகிழ வைத்த வீடியோ!

என்ன விட்டு போகாத.. கன்று குட்டியை தூக்கி சென்ற ஆட்டோவை துரத்தி சென்ற தாய் பசு! நெகிழ வைத்த வீடியோ!

ஆட்டோவை துரத்தி சென்ற பசு

ஆட்டோவை துரத்தி சென்ற பசு

பிறந்த குட்டியை ஆட்டோவில் அழைத்து செல்வதை தாங்கி கொள்ளமுடியாமல் பின் தொடர்ந்து ஓடியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagapattinam | Nagapattinam | Tamil Nadu

  நாகையில் ஈன்ற கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் அழைத்துச் செல்வதை தாங்கிக்கொள்ள இயலாத பசுமாடு ஒன்று விரட்டி சென்று பாச மழை பொழிந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன். இவர் வளர்த்து வந்த பசுமாடு இன்று நாகை கடற்கரை சாலை அருகே கன்றுக்குட்டி ஈன்றது.

  பசுவை காணவில்லை என பல்வேறு இடங்களில் தேடிச்சென்ற கணேசன்,  கன்று குட்டி ஈன்ற நிலையில் பசுவை கடற்கரை சாலையில் கண்டார்.

  இதையடுத்து கன்று குட்டியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது தான் ஈன்ற கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் அழைத்துச் செல்வதை தாங்கிக்கொள்ள முடியாத பசுமாடு மா, மா... என கத்திக் கொண்டு பின்னாடியே 2 கிலோமீட்டர் தூரம் வரை துரத்தி சென்றது.

  கன்றுக் குட்டியை அழைத்துச்சென்ற ஆட்டோவின் பின்னால் நீண்ட தூரம் ஓடிய பசு! pic.twitter.com/Ez9U5UY3p5

  ஒரு கட்டத்தில் ஆட்டோவை வழிமறித்து நின்ற பசுமாடு குட்டியை ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தது. பிறந்தகுட்டியை பத்திரமாக வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என உரிமையாளர் ஆட்டோவில் எடுத்து செல்வதை உணராத தாய் பசு, கன்றை பிரிய மனமில்லாமல் வாடி தவித்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Nagai district, Nagapattinam, Viral Video