Home /News /nagapattinam /

நாகை அருகே குடிபோதையில் தகராறு செய்த கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை... 2 பேர் கைது...

நாகை அருகே குடிபோதையில் தகராறு செய்த கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை... 2 பேர் கைது...

கொலைச் செய்யப்பட்ட நரசிங்கமூர்த்தி

கொலைச் செய்யப்பட்ட நரசிங்கமூர்த்தி

Nagapattinam | நாகை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நாகூர் நகர போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India
    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார்‌. மேலும் அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள உறவினரான பரமசிவம் என்பவரிடமும் இவர் மது போதையில் சில சமயங்களில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு  வீட்டிற்கு வந்த  நரசிம்ம மூர்த்திக்கும் உறவினரான பரமசிவத்துக்கு  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் பரமசிவம் வீட்டில் இருந்த மிதிவண்டியை நரசிம்மமூர்த்தி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவன் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே நரசிம்மமூர்த்தி உயிரிழந்தார்.

    Also see... திருட வந்தவர்கள் சிசிடிவி-க்கு முத்தம் கொடுத்து சென்றதால் பரபரப்பு

    இது குறித்து நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக பரமசிவம்(57) மற்றும் அவரது மகன்  ஆகிய இருவரை கைது செய்த நாகூர் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: பாலமுத்துமணி, நாகப்பட்டினம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Crime News, Murder, Nagapattinam

    அடுத்த செய்தி