ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

திமுக - பாஜகவினர் இடையே வெடித்த மோதல் : நகர்மன்ற உறுப்பினர் உள்பட 7 பேருக்கு காயம்!

திமுக - பாஜகவினர் இடையே வெடித்த மோதல் : நகர்மன்ற உறுப்பினர் உள்பட 7 பேருக்கு காயம்!

திமுக- பாஜக மோதல்

திமுக- பாஜக மோதல்

நாகை அருகே திமுக , பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜகவினர் 5 பேர் திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். திமுக மற்றும் பாஜகவினர் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பதற்றம் நிலவியது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India

    நாகப்பட்டினம்  அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர். இவர் கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் விஜேயந்திரனுக்கு பாஜக மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாக அந்தப் பகுதியில் விஜயேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர்.

    அப்போது  அருகில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி மளிகை கடையில் பட்டாசு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணிக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக-வை சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    அவர்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரியில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர், மருத்துவமனை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Also see... புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட சிறைத்துறை டிஜிபி

    இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல்  மருத்துவமனையில் திமுக மற்றும் பாஜகவினர் குவிந்ததால் அந்த பகுதி முழுவதும் பதட்டமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: BJP, DMK, Nagai