ஹோம் /நியூஸ் /Nagapattinam /

திருமணத்திற்கு முன்பே மரணித்த காதலன்.. அவர் நினைவுகளோடு மருமகளான காதலி! 

திருமணத்திற்கு முன்பே மரணித்த காதலன்.. அவர் நினைவுகளோடு மருமகளான காதலி! 

திருமணத்திற்கு முன்பே மரணித்த காதலன்.. அவர் நினைவுகளோடு மருமகளான காதலி! 

திருமணத்திற்கு முன்பே மரணித்த காதலன்.. அவர் நினைவுகளோடு மருமகளான காதலி! 

10 ஆண்டுகள் காதலித்த இருவரும் ஒன்று சேர 45 நாட்களே இருக்கும் நிலையில், 2021 ஜூலை 7 ஆம் தேதி வேளாங்கண்ணியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நாகை அருகே திருமணத்திற்கு முன்பே காதலன் உயிரிழந்த நிலையில், அவரது நினைவுகளோடு புகுந்த வீட்டில் வாழும் பெண், கண்போரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்...

  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிராபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - பத்மாவதி தமதியினரின் மகன் சபரிகிருஷ்ணன். 26 வயதான இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார்.

  இந்த நிலையில் அவரது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஜெயா - மோஹன் தம்பதியினரின் மகள் ரேவதியும், சபரி கிருஷ்ணன் ஆகியோரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 20.08.2021 அன்று திருமண நாள் குறித்து, அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இருவீட்டாரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

  10 ஆண்டுகள் காதலித்த இருவரும் ஒன்று சேர 45 நாட்களே இருக்கும் நிலையில், 2021 ஜூலை 7 ஆம் தேதி வேளாங்கண்ணியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதனால் அதீத மன உளைச்சலுக்கு ஆளான ரேவதி, காதல் கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் காதல் கணவரின் இழப்பை நினைத்து யோசிக்காமல், மகனை இழந்து வாடும் தனது கணவரின் வயதான, தாய் தந்தையின் நிலைமையை நினைத்து கவலையுற்ற ரேவதி, அவர்களோடு வாழ முடிவெடுத்துள்ளார்.

  இதனால் தனது வீட்டில் இருந்து வந்த ரேவதி, காதல் கணவரின் நினைவாக தனது வயதான மாமியார் மாமனாருக்கு பணிவடைகள் செய்து, காதல் கணவரின் நினைவாக வாழ்ந்து வருகிறார். மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவாக நாங்கள் எங்கள் மருகமகளை பார்த்து வருவதாக கண்ணீர் மல்க கூறுகிறார் தாய் பத்மாவதி.

  மின் இணைப்புகளை துண்டிக்காமல் மரக் கிளைகளை அகற்றியதால் சபரி கிருஷ்ணன் உயிரிழந்ததாக உறவினர்கள் போராடினர். அவர் உயிரிழந்து 10மாதங்களை கடந்தும் தற்போது வரை உரிய நீதி கிடைக்க வில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். ரூ.3 லட்சம் இழப்பீடு தருவதாக கூறிய நிலையில், அதுவும் வழங்கவில்லை.

  ஆகவே தமிழக அரசு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கடந்த மே.31 நாகை வந்த முதல்வரிடம் மனு அளித்துள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

  திருமணத்திற்கு முன்பே தனது காதல் கணவர் உயிரிழந்த நிலையிலும் அவரது நினைவுகளோடு புகுந்த வீட்டிற்குச் சென்று வாழ்ந்து வரும் பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - பாலமுத்துமணி..

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Nagapattinam