முகப்பு /செய்தி /நாகப்பட்டினம் / வடிவேலு பட பாணியில் டெஸ்ட் டிரைவ் என கூறி பைக் திருட்டு... முதியவருக்கு கிடைத்த மாலை மரியாதை

வடிவேலு பட பாணியில் டெஸ்ட் டிரைவ் என கூறி பைக் திருட்டு... முதியவருக்கு கிடைத்த மாலை மரியாதை

வடிவேலு பட பாணியில் பைக் திருட்டு

வடிவேலு பட பாணியில் பைக் திருட்டு

Nagapattinam district News : வேளாங்கண்ணி அருகே வடிவேல் பாணியில் இருசக்கர வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி திருடிய முதியவரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கையும் களவுமாக பிடிபட்ட திருடருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்யில் பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் பழைய  இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் 68 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் வேண்டுமெனவும் அதற்காக முன் வைப்பு தொகையாக ரூ.1000 கொடுத்து சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை வாங்கும் பாணியில் கையில் பணப்பை போல ஒன்றை எடுத்து  வந்துள்ளார். அதை கடையில் பணிபுரியும் பணி பெண் ஒருவரிடம் கொடுத்து விட்டு, வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி ஓட்டிச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அவர் கடையில் வைத்து சென்ற கை பையை சோதித்து பார்த்துள்ளார்.

அதில், கட்டுக்கட்டாக பணம் இருப்பது போல பேப்பர் கட்டை சுருட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து அவர், இருசக்கரத்துடன் மாயமான முதியவர் மீது வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சிசிடிவி யில் பதிவான காட்சிகளை வைத்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் திருட்டு ஆசாமியை வலை வீசி தேடி  வந்தனர்.

பைக் திருடிச் சென்ற முதியவர்

அப்போது, பைக்கை திருடி சென்ற நபரின் செல்போன் நம்பரை வைத்து டவர் லொகேஷன் மூலம் கண்டுபிடித்த நிலையில், அவர் காரைக்கால் பகுதியில் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் கடை உரிமையாளர், முதியோரை தேடி அலைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணக்கட்டுபோல் காட்டி ஏமாற்றப்பட்ட பேப்பர் கட்டு

இந்நிலையில், திருடிய பைக் நம்பரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டி  ஹாயாக வலம் வந்துக்கொண்டிருந்த போது அவர் வசமாக சிக்கினார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்  அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 68 வயதான குமார் என்பதும் அவர் காரைக்காலில் வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது.

Must Read : “பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு பள்ளிக்கு வாங்க” - இடைநின்ற மாணவர்களை அழைத்துச் சென்று அசத்திய கரூர் மாவட்ட ஆட்சியர்!

அதைத் தொடர்ந்து காரைக்காலில் இருந்து அவருக்கு மாலை மரியாதையுடன் லாகவமாக அழைத்து வந்த கடை உரிமையாளர் தரப்பினர், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் அந்த திருட்டு ஆசாமியை ஒப்படைத்தனர். வடிவேல் பாணியில் இருசக்கர வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி திருடிய முதியவர் டவர் லொகேஷன் மூலம்  சிக்கி, கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் - பாலமுத்துமணி.

First published:

Tags: Bike Theft, Nagapattinam, Vadivelu