Home /News /nagapattinam /

நாகையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை... செவிலியர், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுகள்...

நாகையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை... செவிலியர், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுகள்...

நாகையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

நாகையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

Nagapattinam | நாகை அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேயை காப்பாற்றிய செவிலியர்  மற்றும் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India
    நாகை மாவட்டம் ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மனைவி அமுதா. 30 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான அமுதா நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பிரசவ வலியுடன் திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் நித்தியா, கர்பிணி அமுதாவை  மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

    108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநர் இளங்கோவன் வாகனத்தை ஓட்ட, 108 வாகனத்தின் செவிலியர் ரம்யா கர்ப்பிணி அமுதாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்துள்ளனர். திருமருகல் அடுத்த திட்டச்சேரி பகுதியில் அமுதாவிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சாதுர்யமாக செயல்பட்ட செவிலியர் ரம்யா, 108 வாகனத்திலேயே அமுதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார்.

    பின்னர் சில நிமிடங்களிலேயே கொந்தை என்னும் இடத்தில் அமுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதை அறிந்த ரம்யா மற்றும் ஓட்டுநர் இளங்கோவன் ஆகியோர் வேகமாக வாகனத்தை இயக்கி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

    Also see...கோவில் அர்ச்சகர்கள் நியமனத்தில் புதிய விதிகள் -

    அங்கு, தாய் அமுதா மற்றும் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை அருகே 108 வாகனத்திலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய் சேயை காப்பாற்றிய செவிலியர் மற்றும் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    செய்தியாளர்: பாலமுத்துமணி, நாகை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ambulance, Boy baby, Nagai district, New born baby

    அடுத்த செய்தி