Home /News /nagapattinam /

வேளாங்கண்ணி மாதா பேராலய பெரிய தேர்பவனி... பல்லாயிரகணக்கான மக்கள் குவிந்தனர்

வேளாங்கண்ணி மாதா பேராலய பெரிய தேர்பவனி... பல்லாயிரகணக்கான மக்கள் குவிந்தனர்

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா...

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா...

Velankanni | வேளாங்கன்னி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியத்தேர்பவனி இன்று மாலை நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Velankanni, India
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழத்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது. இதன் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய  பெரிய சப்பர பவனி எனப்படும், பெரியத்தேர்பவனி இன்று மாலை நடைபெற உள்ளது.

    தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு,கூட்டுபிராத்தனை உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டு தேர் புனிதம் செய்து தேர் கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு உத்திரியமாதா தெரு வழியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவனி வரும்.

    இதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி வருகை தந்துள்ளனர். அத்துடன் மாதா சப்ரங்களை இழுத்தபடி பல நூறு கிலோமீட்டரிலிருந்து பாதயாத்திரை ஆகவும் வாகனங்கள் மூலமும் வேளாங்கண்ணியில்  குவிந்துள்ளனர்.

    Also see... நீட் தேர்வு :மாணவர்களுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

    நாளை மாதா பிறந்த நாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் கூட்டு பாடல்  திருப்பலி நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாளை மாலை கொடி இறக்கத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. நாளை 8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: பாலமுத்துமணி, வேளாங்கண்ணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Nagai

    அடுத்த செய்தி