நாகையில் பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுக்கும் பகீர் ஆடியோ வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டம் புத்தூர் பகுதியில் நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் இந்த கல்லூரியில், உடற்கூறியல் ஆசிரியராக சதீஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இந்நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம், ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : விவாகரத்து வாங்காம 2 கல்யாணம்.. காதல் மன்னனாக வலம் வரும் கணவன்.. கண்ணீர் வடிக்கும் பெண்
இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ளது. ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி ஆசிரியர் மாணவி ஒருவரை கண்டிப்பதற்காக தனது வீட்டிற்கு கட்டாயப்படுத்தி அழைப்பதும், அதற்கு அந்த மாணவி நான் கல்லூரிக்கு மட்டுமே வர முடியும் என்று கூறும்
ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் தனக்கு மாதவிலக்கு வலி இருப்பதாக சொல்லி அந்த பெண் சமாளிக்கவே அதையும் மீறி அந்த ஆசிரியர் "பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா” என்று தனது வீட்டிற்கு அழைக்கிறார்.
ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் பாஜக மாவட்ட தலைவரும், கல்லூரியின் தாளருமான கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கார்த்திகேயன், உடற்கூறியியல் ஆசிரியர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மது போதையில் ஆசிரியர் இதுபோல் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்றும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் தற்போது நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவிகளிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி ஆசிரியர், கண்டிப்பு என்ற பெயரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Nagappattinam, Sexual harassment, Teacher