சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரடியம்புலம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இளைஞர் செந்தில்குமார் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் தற்போது 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.20,000 செலவு செய்து சலூன் கடையை கருப்பு வெள்ளை கட்டங்கள் நிறைந்த வடிவில் வண்ண பூச்சு செய்து செஸ் போர்ட் வடிவில் மாற்றியுள்ளார். சுவர் பகுதி தரைத்தளம் என கடையே கருப்பு வெள்ளை நிறைந்த கட்டங்களாக காட்சியளிக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், கடை முழுவதும் பல்வேறு இடங்களில் செஸ் போர்டு வடிவ கொடிகளையும் காட்சிப்படுத்தியுள்ளார். அறிவு கூர்மையையும், சிந்தனை ஆற்றலையும் பெருக்கும் வகையிலான, செஸ் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்குபெற்று பதக்கங்களை பெற வேண்டும் என இந்த விழிப்புணர்வு முன்னெடுப்பை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

செந்தில்குமார்
Must Read : தடையில்லா சான்றுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய உதவி செயற்பொறியாளர்
நாளை துவங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக முடிதிருத்தி சேவை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சலூன் கடைக்காரரின் இந்த விழிப்புணர்வு முன்னெடுப்பு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
செய்தியாளர் - பாலமுத்துமணி.
உங்கள் நகரத்திலிருந்து(நாகப்பட்டினம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.