ஹோம் /நியூஸ் /நாகப்பட்டினம் /

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிறுவனின் தந்தை தனது மகனை ஏமாற்றி சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagapattinam | Nagapattinam | Tamil Nadu

  நாகையில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 19 வயதுடைய இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆலமழை கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்ததால், இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

  இதனை அறிந்த சிறுவனின் தந்தை தனது மகனான சிறுவனை ஏமாற்றி  தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனிடம் பெண் தவறாக நடந்து கொண்டு கர்ப்பமடைந்து இருப்பதை உறுதி செய்தனர்.

  தொடர்ந்து அந்த பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: பாலமுத்துமணி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Nagai district, Pocso, POCSO case, Sexually harrassed