• HOME
  • »
  • NEWS
  • »
  • memes
  • »
  • சமகால பாதிப்புகளையும் கேலி செய்யும் சார்பட்டா பட ரங்கன் வாத்தியார் மீம்ஸ்

சமகால பாதிப்புகளையும் கேலி செய்யும் சார்பட்டா பட ரங்கன் வாத்தியார் மீம்ஸ்

 ரங்கன் வாத்தியார் மீம்ஸ்

ரங்கன் வாத்தியார் மீம்ஸ்

நெட்டிசன்களிடம் ரங்கன் வாத்தியார் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இணைய உலகத்தில் இளைஞர்களின் கற்பனைத்திறன் மற்றும் சேட்டைகள் ஒருங்கே இணைய பறக்கும் வாத்தியார் மீம்ஸ்களை தற்போது பார்க்கலாம்.

  • Share this:
    பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேல் தலையில் சுத்தியல்  விழும் காட்சி நேசமணி மீம்ஸ்களாக இணையத்தை கலக்கியது போல தற்பொழுது சார்பட்டா பரம்பரை ரங்கன்  வாத்தியார் மீம்ஸ் உலகை வலம் வர தொடங்கியுள்ளது. ர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி நடந்து செல்ல வா வாத்தியாரே நான் கூட்டிட்டு போறேன் என ஆரியா சைக்கிளில் பசுபதியை அழைத்து செல்லும் இந்த காட்சியை அடிப்படையாக வைத்து தற்பொழுது நெட்டிசன்கள் தனது கற்பனை வளத்தை காட்டி வருகின்றனர். 

    எவ்ளோ நாள் தான் சைக்கிளிலேயே போறது என ஆர்யா பைக்கை எடுத்துக்கொண்டு செல்வது போலவும், சைக்கிள்ல போனா லேட் ஆகிடும் வா வாத்தியாரே நாம ஆட்டோல போகலாமென ஆட்டோவில் அழைத்துச் செல்வது போலவும்,  ஹாரிபாட்டர் துடைப்பம், அவதார் படத்தில் வரும் தரூத்மாதா என விதவிதமாக வாகனங்களை மாற்றி வாத்தியாரை வலம் வர செய்கின்றனர்.

    மேலும் லாரியில் சைக்கிளை விட ஆசையாக உள்ளது வாத்தியாரே, கையை விட்டுட்டு ஓட்டுறன் பாரு வாத்தியாரே, வீலிங் பண்றேன் பாரு வாத்தியாரே,  அங்க பாரு வாத்தியாரே உன்ன மாதிரியே ஒருத்தர் இருக்காரு என இஷ்டத்திற்கும் நெட்டிசன்கள் தங்கள் கற்பனைத் திறனை காற்றில் பறக்க விட இதனை பார்க்கும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.



    மேலும் இதுதான் வாத்தியாரே ஓசூர், இதுதான் வாத்தியாரே கர்நாடக பார்டர் என அந்தந்த ஊரை சுற்றி காட்டவும் தற்பொழுது வாத்தியார் மீம்ஸ் பயன்பட்டு வருகிறது.

    இதில் உச்சகட்டமாக வாத்தியாரின் காலை மட்டும் காட்டி மிஸ்கின் படம் என்றும், ரயிலுக்குள் சைக்கிள் மணிரத்தினம் படம் என்றும், பின்னிருக்கையில் பிரேம்ஜி அமரனை அமரவைத்து சென்றால் வெங்கட் பிரபு படம் என்றும் சினிமா இயக்குனர்களை கிண்டல் செய்வோம் தற்போது வாத்தியார் கருவியாக மாறி உள்ளார்.



    சார்பட்டா பரம்பரை கபிலன், ரங்கன் வாத்தியார் இணையதளத்தில் பிரபலமடைந்ததுள்ளதால் கபிலன் உடன் போட்டிபோட்ட வேம்புலி ,தனது  இடியாப்ப பரம்பரை வாத்தியார் ஆன துரைக்கண்ணு உடன் சைக்கிளில் புறப்பட்ட கையோடு இணையத்திலும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



    ரசிகர்கள் மத்தியில் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த வாத்தியார் மீம்ஸ் பயன்படுத்தி பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட சமகால பாதிப்புகளையும் பகடி செய்கின்றனர்.



    இன்னும் சில நாட்களுக்கு இணையதளத்தில் வயிறு குலுங்க சிரிக்க வாத்தியார் ஒரு முக்கிய காரணமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: