VIDEO: ரஜினி அரசியலும் நெட்டிசன்களின் மீம்ஸ்களும்

VIDEO: ரஜினி அரசியலும் நெட்டிசன்களின் மீம்ஸ்களும்
  • Share this:
வேண்டாம் என்றாலும் நடிகர் ரஜினிகாந்த் தான் தங்களது முதலமைச்சர் வேட்பாளர் என ரசிகர்கள் ஒருபுறம் ட்விட்டரில் கலக்க, மறுபுறம் அவரது பேச்சுகளை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, அதில் தமது அரசியல் திட்டங்களை கூறிவிட்டு சென்றுவிட்டார் ரஜினி. ஆனால் அவரது பேச்சை சித்தரித்து, பயந்துட்டியா கொமாரு, இரவுகாத்த கிளி என்ற ஹேஷ்டாக்குகளில் ஒரு குரூப் அதகளப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, மலையை தூக்கப்போறேன் என ஊர் மக்களை திரட்டி நடிகர் செந்தில் ஏமாற்றும் காட்சியோடு ஒப்பிட்ட வீடியோதான் தற்போதைய டாப்.


இதுதவிர, அரசியல் எழுச்சி, மீன்குழம்பு சட்டி, சர்க்கரை பொங்கல் என்ற அவரது பேச்சை அங்குலம் அங்குலமாக சித்தரித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கட்சி பெயரை அறிவித்து காரியத்தை சாதிப்பார் என எதிர்பார்த்தால், வழக்கம்போல குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறுபுறம் வேண்டாம் என்றாலும் ரஜினிதான் எங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என அவரது ரசிகர்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
VIDEO:

 
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading