தமிழக குடும்பங்கள் மீதான கடன் தொகை பற்றி இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்...!

வைரலாகும் மீம்ஸ்

தமிழக அரசின் கடன் மொத்தம் ஐந்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும், இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2,63.976 ரூபாய் கடன் இருப்பதாகவும் நிதியமைச்சர் கூறியிருந்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டரை லட்ச ரூபாய் கடன் இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை, சமூக வலைதள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

  தமிழக அரசின் கடன் மொத்தம் ஐந்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும், இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2,63.976 ரூபாய் கடன் இருப்பதாகவும் நிதியமைச்சர் கூறியிருந்தார். இந்த தொகையை காந்தியவாதி ஒருவர் செக் மூலம் செலுத்த, நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பாக மீம்ஸ்கள் அதிகரித்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  குறிப்பாக ரோஷமான தமிழர் ஒருவர் கடனை செலுத்திவிட்டது போலவும், இனி தன்னுடைய கையெழுத்து இல்லாமல் கடன் கொடுக்காதீர்கள் என்று வங்கிக்கு அறிவுறுத்துவது போலவும் மீம்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தொகையில் மேலும் 36,000 ரூபாய் கூடுதலாக வழங்கச் சொல்லி, ரவுண்டாக மூன்று லட்சமாக ஆக்கச் சொல்லுவோமா என வடிவேலு யோசிக்கும் மீம்ஸும் இணையத்தை கலக்கி வருகிறது.  இதேபோல சீட்டாடும் வடிவேலுவிடம் ஒரு ஐம்பது ரூபாய் கேட்கும் போது, நானே இரண்டரை லட்ச ரூபாய் கடன்ல இருக்கே, போவியா என்று வடிவேலு அங்கலாய்ப்பது போலவும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கற்பனை வளத்தை கொட்டியுள்ளனர்.  Also read... 17 பத்தாது 28 சதவீதம் வேண்டும் - அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் ஓ.பி.எஸ்.

  மீம்ஸ் டெம்பிளேட்டுகளுக்கே பெயர்போன பாபநாசம் படத்தின் வசனமும் இதற்கு தப்பவில்லை. யாராவது இரண்டரை லட்சத்தை திருப்பிக் கேட்டால், நாங்க 10 வருடம் ஆந்திராவில் இருந்து இன்னைக்கு தான் தமிழ்நாட்டுக்கு வந்தோம்னு சொல்லுனும் என்று கமல் அட்வைஸ் செய்யும் மீம்ஸும் நகைச்சுவையை வரவழைக்கிறது.  இவை அனைத்துக்கும் உச்சமாக, என்னையும் மதிச்சு "ரெண்டே முக்கா லட்சம் கடன் கொடுத்துராக்கனுக்கு நினைக்கும் போது" என்று கிரி படத்தின் வீரபாகு வடிவேலுவின் மீம்ஸ் நய்யாண்டியின் உச்சமாக அமைந்துள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: