Marco Acorte : கொரோனவை கணித்த நெட்டிசனிடம் கல்யாணத்தை கணிக்கச் சொல்லும் 90s கிட்ஸ்!

கல்யாணத்தை கணிக்கச் சொல்லும் 90s கிட்ஸ்!

கொரோனவை கணித்த நெட்டிசனிடம் , ப்ரோ 90s கிட்ஸ் நான் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என கணித்துச் சொல்ல முடியுமா என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    நெட்டிசன் ஒருவர் 8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் வருகை குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டர் தற்போது வைரலாகியுள்ளது. மேக்ரோ அக்ரோட் (@Marco_Acorte) என்ற நெட்டிசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் வந்து கொண்டிருக்கிறது (Corona VIrus on the way) என 2013 ஆம் ஆண்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதன்பின்பு டிவிட்டரில் ஆக்டிவாக இல்லாத அவர், கடைசியாக 2015 ஆம் ஆண்டு சிரிக்கும் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார்.அவரின் இந்தப் பதிவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், கொரோனா வைரஸ் பரவல் குறித்து துல்லியமாக 8 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பதிவிட்டது எப்படி? என வினவி வருகின்றனர்.

    அதேநேரத்தில், தற்போது வேகமாக பரவிக்கொண்டிருக்கும் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் குறித்து அந்த நெட்டிசன் குறிபிட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், மரபணு ரீதியாக பல்வேறு வைரஸ்களை கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் ஒட்டுமொத்த குடும்பம் குறித்து அவர் பதிவிட்டிருக்கலாம் எனவும் பலர் விளக்கமளித்துள்ளனர்.

     

     



     

     



     

    இதுவரை இவரது பதிவு 106K Retweets ,75.9K Quote Tweets , 223.7K லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்த ட்வீட்டை பார்த்த பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

     

     



     

     

    ஒருவர் பாஷா படத்தில் உள்ள வசனத்தை எடுத்து இதற்கு முன்னர் மும்பையில் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

     

     



     

     

    மற்றுமொருவர் ப்ரோ 90s கிட்ஸ் நான் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என கணித்துச் சொல்ல முடியுமா என பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published: