இலங்கை கோச் ஆர்தர் ஆத்திரம்: மீம்கள் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்

மிக்கி ஆர்தரின் கோபம்

ஆட்டம் கைவிட்டுப் போகப் போக இலங்கை பயிற்சியாளர் பல போஸ்களில் முகபாவனைகளில் தன் ஆத்திரத்தைக் காட்டினார், இலங்கை வாரிய அதிகாரி ஒருவரிடம் காச் மூச்சென்று கத்தினார்.

  • Share this:
    இலங்கை அணி நேற்று இந்திய அணி 193/7 என்ற நிலையில் முடிக்காமல் தீபக் சாகர் (69), புவனேஷ்வர் குமார் (19) ஆகியோரை வீழ்த்த முடியாமல் தொடரை இழந்ததையடுத்து இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பல விதமான போஸ்களில் செய்கைகளில் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

    சூரியகுமார் யாதவ் பிரமாதமாக ஆடினார் அவர்தான் உண்மையில் ரன் ரேட்டை தொய்வடையாமல் பார்த்துக் கொண்டார், இடைவெளிகளில் பவுண்டரிகள், ஒன்று ,இரண்டு என்று எடுத்து 55 ரன்களை எடுத்தார்.

    193/7 என்ற நிலையில் தீபக் சாகர், புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்த போது இலங்கை அணி வெற்றி பெற்றுவிட்டதாகவே நினைத்து தப்புக் கணக்குப் போட்டது இலங்கை. கடைசியில் தோல்வி அடைந்தது, ஆட்டம் கைவிட்டுப் போகப் போக இலங்கை பயிற்சியாளர் பல போஸ்களில் முகபாவனைகளில் தன் ஆத்திரத்தைக் காட்டினார், இலங்கை வாரிய அதிகாரி ஒருவரிடம் காச் மூச்சென்று கத்தினார்.

    இதையெல்லாம் வைத்து நெட்டிசன்கள் போட்ட மீம்களில் சில இதோ:











    இந்திய இளம் அணியின் வெற்றியை சீனியர் அணி வீரர்களும் இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தனர்.
    Published by:Muthukumar
    First published: