Home /News /mayiladuthurai /

உலக யானைகள் தினம்.. கோவில்களில் குறைந்துவரும் யானைகளின் எண்ணிக்கை

உலக யானைகள் தினம்.. கோவில்களில் குறைந்துவரும் யானைகளின் எண்ணிக்கை

யானை

யானை

World Elephant Day 2022 : உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு சட்ட திருத்தங்களைத் தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் யானைகளை வளர்க்க வேண்டும் என யானை பிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    யானை, கடல், குழந்தை இந்த மூன்றையும் பார்க்க பார்க்க நேரம் போவதே தெரியாது. தமிழர்களுக்கும் யானைகளுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது. விவசாயத்தில் போர் அடிக்கவும், போரில் எதிரிகளை வீழ்த்தவும், இன்று நாம் பிரமித்துப் பார்க்கும் பல கோயில்களின் கட்டுமானத்துக்கும் யானைகளின் பங்கு அளப்பரியது.

    'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை' என்று பாடப்பட்டுள்ளது. கோவில்களை கட்டமைக்க யானைகள் செய்த உதவிக்கு கைமாறு தெரிவிக்கும் விதமாக இன்றளவும் கோவில்களில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் புனித நீர் அடங்கிய கலசத்தை யானை மீது வைத்து கொண்டு வரும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

    யானை கட்டிப் போரடித்தல்


    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக  கோவில்களில் குறைந்து வருகிறது. முன்பு தமிழகத்தில் கோவில்கள் பலவற்றில் யானைகள் இருந்த நிலையில் தற்போது 30 யானைகள் மட்டுமே உள்ளன. உதாரணத்திற்கு தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜசோழனின் படையில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் ஒரு யானை கூட இல்லை.

    அதேபோல மயிலாடுதுறையை சுற்றியுள்ள (40 கிலோமீட்டர் சுற்றியுள்ள சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர் உள்ளடக்கிய) பகுதிகளில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட யானைகள் கோவில்களிலும், மடங்களிலும் இருந்தன. தருமபுரம் மடம் நலன் யானை, வைதீஸ்வரன்கோயில் தையல்நாயகி யானை, சீர்காழி ஜெயந்தி யானை, சிதம்பரம் நடராஜன் யானை, திருப்பனந்தாள் மடம் பெரியநாயகி யானை ஜெயந்தி யானை, திருவாவடுதுறை மடம் ஜெயா யானை, திருவிடைமருதூர் கோமதி யானை, திருபுவனம் தருமி யானை, கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் யானை, சுவாமிமலை துர்க்கா யானை, திருப்புகலூர் சூலிகாம்பாள் யானை, திருக்குவளை தியாகராஜன் யானை, திருவாரூர் கமலாம்பாள் யானை, நாகூர் தர்கா பாத்திமா பீவீ யானை ஆகிய யானைகள் இருந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யானை


    ஆனால் தற்போது மயிலாடுதுறை அபயாம்பிகை யானை, திருக்கடையூர் அபிராமி யானை, உப்பிலியப்பன் கோயில் பூமாதேவி யானை, கும்பகோணம் மங்களம் யானை ஆகிய நான்கு யானைகள் மட்டுமே உள்ளன.

    Must Raed : வீட்டின் சுற்றுசுவரில் மூவர்ண தேசியக்கொடி - முன்னாள் இராணுவீரர் அசத்தல்

    சமீபத்தில் மத்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதில், யானைகளை வாங்கவும் விற்கவும் அனுமதி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் பல்வேறு திருக்கோவில்களுக்கு விரைவில் யானைகள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு உலக யானைகள் தினத்திற்குள் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான திருக்கோவில்களுக்கு யானைகள் வரவேண்டும் என்பதே யானை பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Elephant, Mayiladuthurai, Temple

    அடுத்த செய்தி