ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் - கலெக்டர் பட்டியலை வெளியிட்டார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் - கலெக்டர் பட்டியலை வெளியிட்டார்

மாதிரி படம்

மாதிரி படம்

Mayiladuthurai District News | மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் லலிதா வெளியிட்டார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 7,63,645 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறையில் வரைவு வாக்காளர் பட்டியலை  ஆட்சியர் லலிதா வெளியிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் லலிதா வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, கலெக்டர் லலிதா  செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 7,63,645 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,76,642 பேர், பெண் வாக்காளர்கள் 3,86,985 பேர், இதர பிரிவினர் 18 பேரும் உள்ளனர். மாவட்டத்தில் 860 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதையும் படிங்க : PM Kisan நிதி பெற மயிலாடுதுறை விவசாயிகள் இதை உடனே செய்யுங்கள் - 15ம் தேதி கடைசி நாள்...

01.01. 2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் தங்கள் பெயரை புதிதாக சேர்த்துக்கொள்ள மனுவை அளிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் வரும் 12, 13-ஆம் தேதிகளிலும், 26 மற்றும் 27-ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களில் இதற்கான விண்ணப்பத்தை செலுத்தி  முகவரி மாற்றம், திருத்தம் செய்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் வருவாய் கோட்டாட்சியர், வட்ட மற்றும் நகராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.

செய்தியாளர் : கிருஷ்ணகுமார் - மயிலாடுதுறை

Published by:Karthi K
First published:

Tags: Local News, Mayiladuthurai