ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

வாரிசு வெற்றிபெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்..!

வாரிசு வெற்றிபெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்..!

சபரிமலையில் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்

சபரிமலையில் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்

Vijay fans pray at Sabarimala : நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையை சேர்ந்த ரசிகர்கள் சுபாஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்றனர்.

இதையும் படிங்க : மாவா விற்பதை போலீசில் போட்டு கொடுத்தவர் மீது கொடூர தாக்குதல்... சென்னையில் பயங்கரம்!

 இதனைத்தொடர்ந்து, அங்கே பதினெட்டாம்படி அருகில் வாரிசு பட பேனரை வாழ்த்தி உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து விஜய் ரசிகர்களால் இந்த வீடியோ பதிவு வேகமாக பகிரப்பட்டும் வருகிறது.

செய்தியாளர் : கிருஷ்ணகுமார் - மயிலாடுதுறை

First published:

Tags: Actor Vijay, Local News, Mayiladuthurai