ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

வாரிசு படம் வெற்றியடைய வேண்டுதல்...தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாடு நடத்திய விஜய் ரசிகர்கள்...!

வாரிசு படம் வெற்றியடைய வேண்டுதல்...தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாடு நடத்திய விஜய் ரசிகர்கள்...!

தோப்புகரணம் போடும் விஜய் ரசிகர்கள்

தோப்புகரணம் போடும் விஜய் ரசிகர்கள்

வாரிசு திரைப்படம் வெற்றிபெற வேண்டி மயிலாடுதுறை விநாயகர் சன்னதியில் 108 தோப்புக்கரணம் போட்டு ரசிகர்கள் வினோத வழிபாடு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரிசு படம் வெற்றியடைய  விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம்  மாயூரநாதர் ஆலயத்துக்கு விஜய் திரைப்பட போஸ்டருடன் வந்த விஜய் ரசிகர்கள் மாயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

அதனை தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக் கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கி  படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

First published:

Tags: Mayiladuthurai, Varisu