Home /News /mayiladuthurai /

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி வெட்டி படுகொலை... மயிலாடுதுறையில் பதற்றம் - போலீஸ் குவிப்பு

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி வெட்டி படுகொலை... மயிலாடுதுறையில் பதற்றம் - போலீஸ் குவிப்பு

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி வெட்டி கொலை

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி வெட்டி கொலை

மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்தவர் ரவி. இவரின் மகன் கண்ணன் (வயது 31). ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்கநகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும் கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில்  சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இது குறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருப்பதால், தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆகி ஊருக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில், நள்ளிரவு கண்ணன் நல்லத்துக்குடி ரஞ்சித் (19) டபீர் தெரு திவாகர் (22) ஆகியோருடன் இரண்டு இரு சக்கர வாகனத்தில் கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்த கலைஞர் காலனியை சேர்ந்த அஜித், திவாகர், கதிரவன் மற்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

    Must Read : ஒரே நாளில் 3 பேருக்கு பாம்பு கடி.. 6 வயது சிறுவன் உயிரிழப்பு - ஆம்பூரில் சோகம்

    இதை பார்த்து கண்ணனுடன் வந்த ரஞ்சித் மற்றும் திவாகர் தப்பி ஓடியுள்ளனர். அதனையடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து  தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து தலை மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து அதில் ஈடுபட்ட அஜித், திவாகர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கும்பலை தேடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், கொலை நடந்த போது கண்ணனுடன் வந்த டபீர் தெரு திவாகரை போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மயிலாடுதுறை நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மேலும் மோதல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Mayiladuthurai, Murder

    அடுத்த செய்தி