ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

Mayiladudurai News : 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43 செ.மீ மழை பெய்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 17-ம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  வடகிழக்கு பருவ மழை  காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43 செ.மீ மழை பெய்தது.

  இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் மற்ற பகுதிகளில் மழைநீர் வடிந்திருந்தாலும் கூட சீர்காழி பகுதிகளில் மட்டும் இன்னும் மழைநீர் வடிந்த பாடில்லை.

  இதையும் படிங்க : அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.. மதுபோதையில் அட்டகாசம்.. விழுப்புரத்தில் சம்பவம்

  சீர்காழி பகுதிகளில் உள்ள பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. மேலும் சில பள்ளிகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (17.11.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.  எனவே, நாளை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை ” என தெரிவித்துள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Mayiladuthurai, School Leave