மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கொரோனா பூஸ்டர் டோஸ் போடாதவர்களுக்கு போட்டதாக வந்த குறுஞ்செய்தியால் பொதுமக்கள் அச்சமும், குழப்பமும் அடைந்துள்ளனர். சான்றிதழ்களில் பூஸ்டர் டோஸ் போட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரதமர் அறிவித்த இலவச பூஸ்டர் டோஸை போட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முழுவதும் உள்ள பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை போட வேண்டும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.
தற்போது இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் மூன்றாவது தவணையாக பூஸ்டர் போஸ்ட் போட வேண்டும் என மத்திய-மாநிலஅரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட்டு மருத்துவத்துறை அதிகாரிகள் அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, தகவல்களும் பதிவு செய்யப்படு வருகிறது. இந்நிலையில், சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த சேகர், சத்யநாராயணன், கண்ணன், வேதநாயகி உள்ளிட்ட பல பேருக்கு பூஸ்டர் டோஸ் போடாமலேயே போட்டதாக வந்த குறுஞ்செய்தியால் குழப்பம் அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொபைலுக்கு வந்த மெசேஜ்
மேலும், அவர்கள் திருவெண்காடு அரசு மருத்துவமனை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளதாகவும் அவர்களுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியின் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு உண்டான சான்றிதழை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, அதிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Must Read : உயிருடன் உள்ள மூதாட்டிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர்!
இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்திருந்த இலவச பூஸ்டர் டோசை இவர்கள் போட முடியாமல் ஏமற்றம் அடைந்துள்ளனர். எனவே இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம், சீர்காழியில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.