மின்சார கட்டணம் குறைப்பு மற்றும் இறாலுக்கு உரிய விலை ஏற்படுத்தி தராவிட்டால் ஓராண்டு இறால் வளர்ப்பை நிறுத்தி வைப்போம் சீர்காழியில் நடந்த தமிழ்நாடு இறால் வளர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இறால் வளர்ப்பு விவசாயிகளின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது , கூட்டத்தில் கீழ் கண்டன தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டடது. அதில் மத்திய அரசு இறால் தீவன இடுபொருட்களுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி குறைத்ததற்கு நன்றி தெரிவித்தும் , தீவன உற்பத்தியாளர்கள் தீவன விலையை குறைக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இன்றைய சூழலில் ஏற்றுமதியாளர்கள் இறால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால் மட்டுமே இறால் உற்பத்தியை தொடர முடியும் என்றும் மாநில அரசிடம் மின்சார கட்டணத்தை குறைக்க பல முறை கோரிக்கை வைத்தனர். மின்சார கட்டண குறைப்பு மற்றும் இறாலுக்கு லாபகரமான விலை நிர்ணய உத்தரவாதம் அரசு அளிக்க வேண்டும் இல்லையென்றால் ஓர் ஆண்டு இறால் வளர்ப்பு தொழிலை நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளோம் என அந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai, Sirkazhi