முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / ‘ரஜினி வா டா..!’ கருநாகத்தை கூலாக சிகிச்சைக்கு எடுத்த வந்த பாம்பு பிடி வீரர் - சீர்காழியில் பரபரப்பு

‘ரஜினி வா டா..!’ கருநாகத்தை கூலாக சிகிச்சைக்கு எடுத்த வந்த பாம்பு பிடி வீரர் - சீர்காழியில் பரபரப்பு

கருநாகம்

கருநாகம்

கால்நடை மருத்துவமனைக்கு பாம்புக்கு சிகிச்சை அளிக்க பாம்பை எடுத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mayiladuthurai, India

சீர்காழியில் காயமடைந்த கருநாக பாம்பை சிகிச்சைக்கு எடுத்து வந்த பாம்பு பிடி வீரரால் கால்நடை மருத்துவமனையில் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவரது வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. குளியலறை கட்டுமான பணியின் போது அங்கு 6 அடி நீள கருநாகப் பாம்பு இருப்பதைக் கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.

அங்கு வந்த பாண்டியன் வீட்டில் பதுங்கியிருந்த பாம்பினை லாவகமாக மீட்டு எடுத்தார் .அப்போது பாம்புக்கு  கடப்பாரை பட்டு காயம் ஏற்பட்டது கண்ட பாண்டியன் பாம்பிற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அதன்படி வனத்துறை அனுமதி பெற்று  சீர்காழியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பாம்பினை எடுத்துச் சென்று அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் செல்லத்துரையிடம் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.

Also Read: 40 வயசாச்சு இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல.. கிண்டல் பேச்சுகளால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு

தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் உதவியாளர் ராஜா  அடிபட்ட பாம்பிற்கு சிகிச்சை அளித்தார் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதிக்கு பாதுகாப்பாக விடப்பட்டது. கால்நடை மருத்துவமனைக்கு பாம்புக்கு சிகிச்சை அளிக்க பாம்பை எடுத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

First published:

Tags: Local News, Mayiladuthurai, Sirkazhi, Snake, Tamil News