மயிலாடுதுறை அருகே உலக புகழ் பெற்ற திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வயது பூர்த்தியை அடுத்து அவரதுபெயரில் அவரது மனைவி மனைவி துர்கா ஸ்டாலின் பீமரத சாந்தி யாகம் செய்து வழிபாட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால் இங்கு 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்து வரவேற்றனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ யாக பூஜைகளை செய்தார்.
பின்னர் அவர் கோவிலுக்குள்சென்று அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். முதல்வர் மனைவி வருகையை ஒட்டி திருக்கடையூர் கோவில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தியாளர் : கிருஷ்ண குமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Durga Stalin, Mayiladuthurai, MK Stalin