முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / கடல் சீற்றம்.. பூம்புகார்  துறைமுகத்தில் விசை படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்

கடல் சீற்றம்.. பூம்புகார்  துறைமுகத்தில் விசை படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்

பூம்புகார் துறைமுகம்

பூம்புகார் துறைமுகம்

கடல் சீற்றத்தால் சீர்காழி அருகே பூம்புகார்  துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசை படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் மாவட்டத்தை சேர்ந்த 26 கிராம  மீனவர்கள் 3 வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல்  படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக  அமைக்கப்படாததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் கடல் சீற்றத்தால் அலைகள் மீன் பிடி துறைமுகத்தை நேரடியாக தாக்கியது.

இதனால் மீன்பிடி துறைமுகத்தின் உள்ளே படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத  சூழல் ஏற்பட்டுள்ளது.அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விசை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி  சேதம் அடைந்து வருகிறது.

கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் படகுகள் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பூம்புகார் துறைமுகத்தில்  தூண்டில் வளைவு அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென பூம்புகார் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published: