ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

பிரபல ரவுடியை அரிவாளால் வெட்டி சாய்த்த மர்மகும்பல்.. சீர்காழியில் பயங்கரம்!

பிரபல ரவுடியை அரிவாளால் வெட்டி சாய்த்த மர்மகும்பல்.. சீர்காழியில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட ரவுடி

கொலை செய்யப்பட்ட ரவுடி

Sirkazhi murder | பிரபல ரவுடியை வெட்டி சாய்த்த மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sirkali (Sirkazhi) | Mayiladuthurai

சீர்காழி அருகே பிரபல ரவுடி ஒருவர் சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் மீது கஞ்சா மற்றும் சாராய வியாபார வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருந்த அவர் அண்மையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். நேற்று மாலை, அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, கோவில்பத்து என்ற இடத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

இதை தட்டிகேட்ட தினேஷை சரமாரியாக தாக்கியதுடன், அரிவாளால் வெட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தினேஷ், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தகவல் அறிந்த போலீசார், தினேஷை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று தினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Sirkazhi