சீர்காழி அருகே 20 வருடங்கள் பழமையான காவல்துறை வேனில் உயிரை பணயம் வைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மொழியை காத்திட தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸ் சீர்காழி பகுதிக்கு வருகை தந்தார். மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியில் அவரது வருகைக்காக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் இருந்து அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல காவலர்களுக்கு 20 வருடங்கள் பழமையான வேனும் கொடுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த வேனில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு பயணம் செய்வதற்காக காத்திருந்தனர். தொடர்ந்து கொள்ளிடம் சோதனை சாவடியில் காத்திருந்த 10 க்கும் மேற்பட்ட போலீசார் அப்பொழுது வருகை புரிந்த டாக்டர் ராமதாஸ் வாகனத்தை மேற்கண்ட இந்த வாகனத்தில் ஏறி பின் தொடர்ந்தனர்.
வாகனம் மிகவும் பழுதடைந்த நிலையில் உயிரை பணயம் வைத்து இந்த வாகனத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 15 வருடங்களுக்கு உள்ள அனைத்து வாகனங்களை முறையாக பராமரிக்காமல் பயன்படுத்தக்கூடாது என விதிகள் இருந்தும் 20 வருடங்களுக்கு மேலான பராமரிப்பு இல்லாத இந்த வாகனத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வாகனத்தின் மேற்பும் சிதைந்தும்,கதவு கைபிடிகள் இன்றியும் பழுதடைந்த வாகனத்தில் காவலர்கள் அச்சத்துடனே பயணித்தனர். தனியார் வாகனங்களை ஆய்வு செய்து முறையான பராமரிப்பு இல்லை என்றால் அபராதம் விதிக்க வேண்டிய காவல்துறை வாகனமே பரிதாபமான நிலையில் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்பட்டு வாகனத்தில் செல்லும் காவலர்களோ அல்லது சாலையில் செல்லும் பொது மக்களுக்கோ பாதிப்பு ஏற்படும் முன்பாக பழைய வாகனத்தை அப்புறப்படுத்தி காவல் துறைக்கு புதிய வாகனம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai