ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம்... சிவ, வைணவ ஆலயங்களில் சுவாமி வீதியுலா..!

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம்... சிவ, வைணவ ஆலயங்களில் சுவாமி வீதியுலா..!

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம்

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம்

Shiva Vaishnav Temple function aipassi month urchavam | மயிலாடுதுறையில் காவிரியை மையமாக வைத்து நடைபெறும்’ துலா உற்சவத்தை முன்னிட்டு சிவ, வைணவ ஆலயங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதில் காசி விஸ்வநாதர் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடனும் பரிமளரெங்கநாதர் அன்னவாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா சென்றனர். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் பிரசித்தி பெற்ற துலா உற்சவம் பல்வேறு ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் இரவு நிகழ்ச்சியாக சிவ, வைணவ ஆலயங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மலைக்கோயில் விஸ்வநாதர் கோயில் மற்றும் தெப்பக்குளம் காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் சுவாமிகள் ஆலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

  கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அலங்காரம் செய்யப்பட்டு மண்டப தீபாரதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமிகள் கோயிலில் இருந்து புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதேபோல் சந்திர சாப விமோசனஸ்தலமான அருள்மிகு பரிமளரெங்கநாதர் திருக்கோயிலில் துலா உற்சவம் இன்று கருடக்கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.

  Also see... திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை.. மீறினால் பறிமுதல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  இரவு பரிமளரெங்கநாதர் ஆண்டாள் அலங்காரத்தில் அன்னவானத்தில் எழுந்தருளி தீபாரதனை செய்யப்பட்டு தேரோடும் வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு கோயில்கள் கண்கவர் மின்னொளியில் அலங்கரிக்கபட்டு விழக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

  செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுத்துறை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Hindu Temple, Mayiladuthurai