Home /News /mayiladuthurai /

எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து... சாதூர்யமாக செல்பட்ட கார் டிரைவர்

எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து... சாதூர்யமாக செல்பட்ட கார் டிரைவர்

சாலை விபத்து சிசிடிவி

சாலை விபத்து சிசிடிவி

Mayiladuthurai | மயிலாடுதுறையில் நடந்த வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள். சிசிடிவி வீடியோ வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India
    மயிலாடுதுறையில் எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதை பின்தொடர்ந்து வந்த கார் ஓட்டுநர் சாதூர்யமாக வாகனத்தை திருப்பியதால்  உயிரிழப்பு தடுக்கப்பட்டது. தற்போது அதன் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் மெயின் ரோட்டில் சாலையில் வேகமாக எதிரெதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் சாலையில் தடுமாறி விழுந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனம் ஒன்றை பின் தொடர்ந்து வந்த கார் ஓட்டுநர், விபத்தை கவனித்ததும் துரிதமாக செயல்பட்டு சாதுரியமாக தனது வாகனத்தை சாலையின் ஒருபுறம் திருப்பி நிறுத்தினார்.

    Also see... நீதிமன்றங்களில் பந்தாடப்படும் வேலுமணியின் வழக்கு!

    இதனால் அந்த கார் இருசக்கர வாகன ஓட்டுநரின் மீது மோதாமல் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த காட்சி அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுதுறை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CCTV, Mayiladuthurai, Road accident

    அடுத்த செய்தி