Home /News /mayiladuthurai /

மயிலாடுதுறையில் நடந்த பேஷன் ஷோவில் "ராம்ப் வாக்" நடந்த போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

மயிலாடுதுறையில் நடந்த பேஷன் ஷோவில் "ராம்ப் வாக்" நடந்த போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

மயிலாடுதுரை - ரம்ப் வாக் நடந்த போலீஸ் அதிகாதிகள்

மயிலாடுதுரை - ரம்ப் வாக் நடந்த போலீஸ் அதிகாதிகள்

Mayiladuthurai | மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் அண்மையில் நடைபெற்ற "பேஷன் ஷோ" அழகு போட்டியில், ராம்ப் வாக் சென்ற 1 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு போலீசார் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி தனியார் மாடலிங் நிறுவனத்தின் சார்பில் "பேஷன் ஷோ" அழகுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்று 'ரேம்ப் வாக்" எனப்படும் ஒய்யார நடை நடந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்.

    போட்டியின் முடிவில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை "ரேம்ப் வாக்' நடந்து செல்ல போட்டி ஒருங்கிணைப்பாளர் வற்புறுத்தியதால் போலீசார் "ராம்ப் வாக்" செய்தனர். இது ஊடகங்களில் ஒளிபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து போலீசாரை நிர்வாக வசதிக்காக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



    Also see... அதிமுக அறிவிப்பு வெற்று அறிவிப்பு மட்டுமே.. அமைச்சர் மெய்யநாதன்

    நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போதிலும் காவல்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாகப்பட்டினத்தில் இருந்தே இன்னமும் வெளியிடப்பட்டு வருவதால், இந்த உத்தரவை நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: கிருஷ்ணக்குமார், மயிலாடுதுறை 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Mayiladuthurai, Police officer suspended

    அடுத்த செய்தி