Home /News /mayiladuthurai /

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்த இளைஞரை சென்னையில் சுற்றிவளைத்த போலீசார்

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்த இளைஞரை சென்னையில் சுற்றிவளைத்த போலீசார்

வடமாநிலைளைஞர்கள் கைது

வடமாநிலைளைஞர்கள் கைது

மஹி பால்சிங் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல்  காவல்துறை நடைமுறைகளுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Mayiladuthurai
    சீர்காழியில் கடந்த வருடம் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் இளைஞரை சென்னையில்  போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 27.01.2021 தேதி நகைக் கடை வியாபாரி தன்ராஜ் செளத்திரி வீட்டில், தன்ராஜ் செளத்திரி மனைவி ஆஷா, மகன் அகில் இருவரை கொலை செய்துவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் 12 கிலோ தங்கத்துடன் தப்பிச் சென்றது. இதில் மனீஷ், ரமேஷ் பட்டேல் ,கருணாராம் ஆகிய  3 பேர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

    Read More : சாதியை ஒழிக்காமல் மதம் மாற்றத்தை தடை செய்வதை எப்படி ஏற்க முடியும்? - பாஜக எம்.எல்.சி

    மஹி பால்சிங் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல்  காவல்துறை நடைமுறைகளுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, தொடர்ந்து ஜாமினில் சென்ற கருணாகராம், ரமேஷ் பட்டேல் உள்ளிட்ட இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் மனிஷ் என்பவர் மட்டும் ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் போட்டது.

    அதனைத் தொடர்ந்து சென்னையில் பதுங்கி இருந்த மனிஷை சீர்காழி போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சீர்காழி காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து அந்த இளைஞர் மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

    சீர்காழி செய்தியாளர் : பிரசன்னா
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Double murder, Man arrested, Rajasthan

    அடுத்த செய்தி