ஹோம் /நியூஸ் /மயிலாடுதுறை /

கனமழை எதிரொலி : இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை எதிரொலி : இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

மாதிரி படம்

மாதிரி படம்

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பொழிந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளிலுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனமழை காரணமாக மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழை நீரை பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று (14-11-2022) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

  குன்றத்தூர் தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை

  அதேபோல இன்று (14.11.2022) மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

  செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக பள்ளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் 5 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  1. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மானாம்பதி (திருப்போருர் ஒன்றியம்)

  2.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வடகால் (காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்,

  3. அரசு மேல் நிலைப்பள்ளி அனகாபுத்துர் ( புனித தோமையார் மலை ஒன்றியம்)

  4. அரசு உயர் நிலைப்பள்ளி நன்மங்கலம் (புனித தோமையார் மலை ஒன்றியம்

  5. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நன்மங்கலம் (புனித தோமையார் மலை ஒன்றியம்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Heavy Rains, School